Published : 05 Feb 2022 11:14 AM
Last Updated : 05 Feb 2022 11:14 AM

அட்லி, நெல்சன், லோகேஷ்... - விஜய் க்ளிக்கிய புகைப்படம் வைரல்

இயக்குநர்கள் அட்லி, நெல்சன், லோகேஷ் ஆகியோரை நடிகர் விஜய் க்ளிக்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். இப்படத்தில் மாளவிகா மோகனன், நாசர், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் நடித்தனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்தார். இப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. கரோனா காலகட்டத்துக்குப் பிறகு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாகவும் திகழ்ந்தது. ட்விட்டர் தளத்தில் கடந்த ஆண்டு அதிக முறை ட்வீட் செய்யப்பட்ட படமாகும் ‘மாஸ்டர்’ அறிவிக்கப்பட்டது. விஜய், விஜய் சேதுபதி ஆகிய இருவரையுமே புதிய நடிப்பு, உடல்மொழி ஆகியவற்றில் முற்றிலும் புதிய கோணத்தில் காட்டியிருந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

இப்படத்துக்குப் பிறகு தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதில் செல்வராகவன், யோகி பாபு, பூஹா ஹெக்டே, விடிவி கணேஷ், லிலிபுட் ஃபரூக்கி, ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத், எடிட்டராக நிர்மல், கலை இயக்குநராக கிரண் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அட்லி, நெல்சன் ஆகியோருடன் தான் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அப்புகைப்படத்தை எடுத்தது விஜய் என்றும் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x