உருவாகிறதா '96' பாகம் 2? - இயக்குநர் பிரேம்குமார் மறுப்பு

உருவாகிறதா '96' பாகம் 2? - இயக்குநர் பிரேம்குமார் மறுப்பு
Updated on
1 min read

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தின் 2-ம் பாகம் குறித்த தகவலுக்குப் படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் '96'. 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி இந்தப் படம் வெளியானது. பள்ளிக் காலத்து காதலை மையப்படுத்தி வெளியான இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் இடம்பெற்ற கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் இப்போதும் பலருடைய இளைஞர்களின் காலர் ட்யூனாக இருக்கிறது.

இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கிடைத்த வரவேற்பு அளவுக்கு கன்னடம் மற்றும் தெலுங்கில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று (பிப்.1) சமூக வலைதளத்தில் '96' படத்தின் 2-ம் பாகம் உருவாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவல் '96' படத்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் தூண்டியது. இதனால் பலரும் காத்திருப்பதாக '96' படத்தின் புகைப்படங்களுடன் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

இந்தத் தகவலுக்கு '96' படத்தின் இயக்குநர் பிரேம்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். "இந்தச் செய்தி தவறானது. எனக்கு அப்படியொரு எண்ணம் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் பிரேம்குமார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in