Published : 02 Feb 2022 03:24 PM
Last Updated : 02 Feb 2022 03:24 PM

விரைவில் ‘அகண்டா 2’ | மீண்டும் இணைகிறது பாலகிருஷ்ணா - போயபதி சீனு கூட்டணி!

நந்தமுரி பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா’ இரண்டாம் பாகத்துக்கான பணிகளை படக்குழு விரைவில் தொடங்கவுள்ளது.

போயபதி சீனு இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் ‘அகண்டா’. இதில் ப்ரக்யா ஜைஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். கடந்த டிச.2 அன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் 2021ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த தெலுங்குப் படங்களில் ஒன்றாக மாறியது. படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளும் பரவலாக பேசப்பட்டன. சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் இப்படம் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ‘அகண்டா’ இரண்டாம் பாகத்துக்கான பணிகளை படக்குழு விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கான முன் தயாரிப்பு பணிகளை இந்த ஆண்டுக்குள் தொடங்கி அடுத்த ஆண்டு படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது. ‘அகண்டா’ இரண்டாம் பாகத்துக்கு முன்னர் போயபதி சீனு மற்றொரு படத்தில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அப்படத்தை முடித்த பிறகே ‘அகண்டா’ இரண்டாம் பாகத்துக்கான பணிகளில் அவர் கவனம் செலுத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ‘அகண்டா’ படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் உரிமையை கைப்பற்ற பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சாஜித் நாடியாட்வாலா முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது. நடிகர் அக்‌ஷ்யகுமார் அல்லது அஜய் தேவ்கனை நாயகனாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x