Published : 27 Jan 2022 12:57 PM
Last Updated : 27 Jan 2022 12:57 PM

பிரபுதேவா நடிப்பில் உருவாகும் ‘ரேக்ளா’ 

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்துக்கு 'ரேக்ளா' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

என்.ராஜவன் இயக்கத்தில் ‘மை டியர் பூதம்’ என்ற திரைப்படத்தில் பிரபுதேவா நடித்து வருகிறார். இதில் மாஸ்டர் அஸ்வந்த் குமார், ரம்யா நம்பீசன், பிக் பாஸ் சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக இப்படத்தை ரமேஷ் பிள்ளை தயாரிக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இப்படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் ‘பஹீரா’, ‘யங் மங் சங்’, ‘பொய்க்கால் குதிரை’, உள்ளிட்ட படங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. இது தவிர்த்து இந்தியில் ஷிஷ் குமார் துபே இயக்கத்தில் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபுதேவா. இப்படத்துக்கு ‘ஜர்னி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘வால்டர்’ படத்தை இயக்கிய அன்பு இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் பிரபுதேவா ஒப்பந்தமாகியுள்ளார். இது பிரபுதேவா நடிக்கும் 58-வது படமாகும். 'ரேக்ளா' என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்தின் டைட்டில் லுக்கை நேற்று (ஜன 26) படக்குழு வெளியிட்டது. ஆக்‌ஷன் திரைப்படமான உருவாகும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தில் பணிபுரியும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x