Last Updated : 07 Apr, 2016 12:39 PM

 

Published : 07 Apr 2016 12:39 PM
Last Updated : 07 Apr 2016 12:39 PM

ஏப்.22-ல் பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் திருமணம்

பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் திருமணம் ஏப்ரல் 22ம் தேதியும், திருமண வரவேற்பு ஏப்ரல் 24ம் தேதியும் நடைபெறவுள்ளது.

சக்திவேல் பெருமாள்சாமி இயக்கத்தில் பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்த படம் 'உறுமீன்'. இப்படத்தின் படப்பிடிப்பின்போது பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் கடந்த நவம்பர் 8-ம் தேதி நடைபெற்றது.

ஏப்ரல் 22ம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதில் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கிறார்கள். சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நடைபெற இருக்கிறது. திருமண வரவேற்பில் கலந்துகொள்ள தமிழ் திரையுலகினருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் பாபி சிம்ஹா.

மேலும், திருமணத்திற்குப் பிறகு ரேஷ்மி மேனன் நடிப்பதை நிறுத்துவிட்டு, பாபி சிம்ஹாவின் தயாரிப்பு நிறுவனத்தின் பணிகளை கவனிக்க இருக்கிறார். பாபி சிம்ஹாவின் முதல் தயாரிப்பான 'வல்லவனுக்கு வல்லவன்' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x