Published : 20 Jan 2022 09:01 AM
Last Updated : 20 Jan 2022 09:01 AM

‘தி பேட்மேன்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

‘தி பேட்மேன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மைக்கேல் கீடன், வால் கில்மர், ஜார்ஜ் க்ளூனி உள்ளிட்ட பல நடிகர்கள் பேட்மேன் கதாபாத்திரத்தில் இதுவரை நடித்துள்ளனர். ஆனால், கிறிஸ்டியன் பேல் நடிப்பில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் வந்த 'பேட்மேன் பிகின்ஸ்' திரைப்படம்தான், பேட்மேன் கதாபாத்திரம் எப்படி உருவானது என்பதைச் சொல்லியது.

'டார்க் நைட்', 'டார்க் நைட் ரிட்டர்ன்ஸ்' படங்களுக்குப் பிறகு ஸாக் ஸ்னைடர் இயக்கத்தில் பென் ஆஃப்லெக் பேட்மேனாக நடிக்க, 'பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன், 'ஜஸ்டிஸ் லீக்' ஆகிய படங்கள் வெளியாயின.

தற்போது ராபர்ட் பேட்டின்சன் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடிக்க, மேட் ரீவ்ஸ், 'தி பேட்மேன்' என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. லண்டனின் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு கரோனா இரண்டாம் அலையின் போது சில நாட்கள் தடைபட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது முழுமையாக படப்பிடிப்புப் பணிகள் முடிந்து ‘தி பேட்மேன்’ படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இப்படம் வரும் மார்சி 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்காக இரண்டு பிரத்யேக போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x