Published : 19 Jan 2022 01:05 PM
Last Updated : 19 Jan 2022 01:05 PM

அஜித் - ஹெச்.வினோத் காம்போவில் புதிய படத்துக்கான பணிகள் தொடக்கம்

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்துக்கான பணிகள் ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளன.

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம் கரோனா பரவலால் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ‘வலிமை’ மட்டுமின்றி ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’, பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்ட படங்களும் ஒத்திவைக்கப்பட்டன.

‘வலிமை’ படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜீத் - ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணி மீண்டும் இணைகிறது. இப்படத்தில் குறைவான ஆக்‌ஷன், நிறைய வசனங்கள் இருக்கும் என்றும், உலக அளவில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பற்றி இப்படம் பேசவுள்ளது என்றும் ஹெச்.வினோத் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்நிலையில், அஜித் - ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகும் இப்படத்துக்கான பிரமாண்ட அரங்குகள் அமைக்கும் பணி இன்று ஹைதரபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கவுள்ளதாக படக்குழு வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x