Published : 01 Jan 2022 12:33 PM
Last Updated : 01 Jan 2022 12:33 PM

விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனியின் நடிப்பில் 'கோடியில் ஒருவன்', 'தமிழரசன்', 'அக்னிச் சிறகுகள்', 'காக்கி', 'பிச்சைக்காரன் 2' உள்ளிட்ட பல படங்கள் தயாராகி வருகின்றன. இதில் சில படங்களின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன.

என்.வி.நிர்மல் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் ‘சலீம்’. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ‘மழை பிடிக்காத மனிதன்’ என்று தலைப்பிடப்பட்ட இப்படத்தை விஜய் மில்டன் எழுதி, இயக்குகிறார். 2022ஆம் ஆண்டு திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படம் தவிர்த்து 'தமிழரசன்', 'அக்னிச் சிறகுகள்', 'காக்கி', 'பிச்சைக்காரன் 2' உள்ளிட்ட பல படங்கள் தயாராகி வருகின்றன. இதில் 'தமிழரசன்' படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது. எனினும் கரோனா அச்சுறுத்தலால் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவிக்காமலே இருந்து வந்தது. இந்நிலையில் இப்படம் வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, ரம்யா நம்பீசன், சோனு சூட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x