Published : 01 Jan 2022 11:46 AM
Last Updated : 01 Jan 2022 11:46 AM

ஐஸ்வர்யா ராஜேஷின் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

மலையாளத்தில் வெற்றி பெற்ற 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' தமிழ் ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடித்திருந்த படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. ஜனவரி 15-ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆணாதிக்கச் சிந்தனையால் பாதிக்கப்படும் ஒரு படித்த பெண்ணின் நிலையை அழுத்தமாக, யதார்த்தமாகக் காட்டியிருந்ததாகப் பாராட்டுகளைப் பெற்றது.

இப்படம் அதே பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்கி, தயாரித்து வருகிறார். இதில் நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். சுராஜ் வெஞ்சரமூடு கதாபாத்திரத்தில் ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். இப்படம் தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியெம், வசனகர்த்தாவாக சவரிமுத்து மற்றும் ஜீவிதா சுரேஷ்குமார், எடிட்டராக லியோ ஜான் பால், கலை இயக்குநராக ராஜ்குமார் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x