Published : 25 Dec 2021 04:13 PM
Last Updated : 25 Dec 2021 04:13 PM

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் மேகா ஆகாஷ்

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’படத்தில் நாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

என்.வி.நிர்மல் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் ‘சலீம்’. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ‘மழை பிடிக்காத மனிதன்’ என்று தலைப்பிடப்பட்ட இப்படத்தை விஜய் மில்டன் எழுதி, இயக்குகிறார். 2022ஆம் ஆண்டு திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இவர்களுடன் சரத்குமார், ரமணா, சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க தேமுதிக தலைவர் விஜயகாந்தைப் படக்குழு அணுகியதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த தகவல்கள் எதையும் படக்குழு இன்னும் வெளியிடவில்லை.

இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x