Published : 16 Dec 2021 11:44 AM
Last Updated : 16 Dec 2021 11:44 AM
விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'லைகர்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கரண் ஜோஹர், பூரி ஜெகன்நாத், நடிகை சார்மி உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் படம் 'லைகர்'. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. அனன்யா பாண்டே நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கி வருகிறார்.
இந்திய சினிமாவில் முதல் முறையாக இப்படத்தில் மைக் டைசன் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு கவுரவ வேடம் என்றும், படத்தின் இறுதிக் கட்டத்தில் அவரது கதாபாத்திரத்தை வைத்தே முக்கியமான திருப்பம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. டைசன் தொடர்பான காட்சிகளை அமெரிக்காவில் படமாக்கிவிட்டு சமீபத்தில் ‘லைகர்’ படக்குழு இந்தியா திரும்பியது. மீதியிருக்கும் சில காட்சிகளைப் படக்குழு ஒரே கட்டமாக எடுத்து முடிக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
It’s Time.
— Vijay Deverakonda (@TheDeverakonda) December 16, 2021
A long journey culminates in Two very important dates!
Stay Ready..
And Remember the words that have been said. #Liger pic.twitter.com/XZT9irEorb
Sign up to receive our newsletter in your inbox every day!