Published : 13 Dec 2021 03:10 PM
Last Updated : 13 Dec 2021 03:10 PM

ஆண்களைக் கொச்சைப்படுத்துவதாக புகார்: 'புஷ்பா' பாடலுக்கு எதிராக வழக்கு 

'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு எதிராக ஆண்கள் அமைப்பு ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.

ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுடன் நடித்துள்ளார்கள். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் உருவாகியுள்ளது.

இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாடியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் வரும் டிசம்பர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் பாடல்களைப் படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ‘ஊ அன்ட்டவா’ என்ற பாடலை ‘புஷ்பா’ படக்குழு யூடியூபில் வெளியிட்டது. இந்தப் பாடலுக்கு சமந்தா நடனமாடியுள்ளார். இப்பாடலின் வரிகள் ஆண்களைக் கொச்சைப்படுத்துவதாகக் கூறி ஆண்கள் அமைப்பு ஒன்று ஆந்திர உயர் நீதிமன்றத்தில் இப்பாடலைத் தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x