Published : 14 Mar 2016 02:58 PM
Last Updated : 14 Mar 2016 02:58 PM

கே.வி.ஆனந்த் - விஜய் சேதுபதி இணைய வாய்ப்பு

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான படம் 'அனேகன்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. 'அனேகன்' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்காக கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.

இப்படத்தின் நாயகனாக நடிக்க ஆர்யா, ஜீவா, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் கே.வி.ஆனந்த். இறுதியில் ஜீவா நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் கே.வி.ஆனந்த் என்று தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில், தற்போது விஜய் சேதுபதியை இயக்க இருக்கிறார் கே.வி.ஆனந்த். இதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'கோ' படத்தின் கதைக்களம் போலவே இப்படத்தின் கதைக்களமும் இருக்கும் என்கிறது படக்குழு.

இப்படத்தை பிரம்மாண்ட படங்களைத் தயாரிக்கும் பெரிய நிறுவனம் ஒன்று தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x