Last Updated : 10 Mar, 2016 12:42 PM

 

Published : 10 Mar 2016 12:42 PM
Last Updated : 10 Mar 2016 12:42 PM

அறுந்த ரீலு 19: அனுராக் காஷ்யபை தவிக்கவிட்ட தினேஷின் தவிப்பு

'விசாரணை' படத்தைப் பார்த்துவிட்டு அனுராக் காஷ்யப் தொடர்ச்சியாக போன் செய்த போது எடுக்காமல் விட்டுவிட்டார் தினேஷ்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ் நடிப்பில் வெளியான 'விசாரணை' படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூல் ரீதியாகவும் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

2015ம் ஆண்டு வெளியான சிறந்த 10 படங்கள் பட்டியலில் 'விசாரணை' படத்தையும் குறிப்பிட்டார் இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர் அனுராக் காஷ்யப். 'விசாரணை' படத்தைப் பார்த்துவிட்டு வெற்றிமாறனிடம் இருந்து தினேஷின் நம்பரை வாங்கி போன் செய்திருக்கிறார் காஷ்யப்.

ஆனால், தெரியாத நம்பர் என்பதால் தினேஷ் போனை எடுக்கவில்லை. தவித்துப் போய் இறுதியாக "ஹாய் தினேஷ்! தற்போது தான் 'விசாரணை' பார்த்தேன், என்ன ஒரு அற்புதமான நடிப்பு. கடந்த வருடத்தில் நான் பார்த்த 'தித்லி' படத்துக்கு பிறகு சிறந்த படம். வெற்றியிடம் இருந்து உங்களது நம்பரை வாங்கினேன். பிரமாதம். இப்போது உங்களுக்கு மற்றொரு ரசிகர் கிடைத்திருக்கிறார்" என்று குறுந்தகவல் அனுப்பி இருக்கிறார் அனுராக் காஷ்யப்

இந்தி திரையுலகின் ஒரு முன்னணி இயக்குநரின் போனை எடுக்க முடியாமல் போய்விட்டோமே என்று குறுந்தகவலுக்கு பிறகு மிகவும் வருந்தித் தவித்தார் தினேஷ். ஆனால், ஒரு முன்னணி இயக்குநரின் பாராட்டால் மிகுந்த மிகழ்ச்சியில் இருக்கிறார்.

முந்தைய பாகம் - >அறுந்த ரீலு 17: சிம்பு பட டீஸர் 'அவசர' ரிலீஸ் பின்னணியில் ரஹ்மான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x