Published : 22 Nov 2021 12:14 PM
Last Updated : 22 Nov 2021 12:14 PM

 'குருதி ஆட்டம்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள 'குருதி ஆட்டம்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெற்றி, எம்.எஸ்.பாஸ்கர், அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான படம் ‘8 தோட்டாக்கள்’. இப்படம் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்துக்குப் பிறகு இயக்குநர் ஸ்ரீகணேஷ், அதர்வா நாயகனாக நடிக்கும் 'குருதி ஆட்டம்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். யுவன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ராக் போர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிவடைந்துவிட்டாலும், பல்வேறு சிக்கலால் படத்தின் பணிகள் தடைப்பட்டுக் கொண்டே இருந்தது.

இந்நிலையில் 'குருதி ஆட்டம்' திரைப்படம் வரும் டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x