Published : 23 Mar 2016 02:27 PM
Last Updated : 23 Mar 2016 02:27 PM

"என் வாழ்வின் அத்தியாயங்களைப் பற்றி எழுதுகிறேன்" - புதிய புத்தகம் பற்றி ஐஸ்வர்யா தனுஷ்

'3', 'வை ராஜா வை' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், அடுத்ததாக புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ஸ்டாண்டிங் ஆன் அன் ஆப்பிள் பாக்ஸ் (Standing on an Apple Box) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில் தனது தந்தை ரஜினிகாந்த் குறித்தும் எழுதியுள்ளதாக ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

வீட்டிலும், சமுதாயத்திலும் பெண்களின் பங்கு பற்றி தனது புத்தகம் பேசும் என்று கூறியுள்ள ஐஸ்வர்யா, தனது வாழ்வில் நடந்த சம்பவங்கள், மற்ற சிந்தனைகள், நியாபகங்களை தொகுக்க நினைத்த போது புத்தகத்துக்கான யோசனை வந்தது எனக் கூறியுள்ளார். தனது தந்தை நடிகர் ரஜினிகாந்திடமிருந்து தான் கற்ற பாடத்தைப் பற்றியும் இந்தப் புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார்.

"எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், எனது வாழ்வின் பல்வேறு கட்டங்களில், என் வாழ்வின் அத்தியாயங்களைப் பற்றிய, எந்தன் நான் கண்ட வெற்றி தோல்விகள் பற்றிய புத்தகம் இது. முதலில் எளிதாக தோன்றினாலும் இதை எழுதுவது கடினமாக இருந்தது. நீங்களே அதைப் பார்ப்பீர்கள்" என ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

இந்த புத்தகத்தின் உரிமையை உலகப் புகழ்பெற்ற ஹார்ப்பர்காலின்ஸ் பதிப்பகத்தின் இந்தியப் பிரிவு வாங்கியுள்ளது. ரஜினிகாந்தின் பிறந்தநாளானா டிசம்பர் 12-ஆம் தேதி இப்புத்தகம் வெளியாகவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x