Published : 12 Nov 2021 01:02 PM
Last Updated : 12 Nov 2021 01:02 PM

கோவா திரைப்பட விழா: போட்டியிடும் 15 படங்கள் வெளியீடு

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

கோவாவில் நடைபெறும் 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிடும் 15 படங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

போட்டியில் பங்கேற்கும் 15 திரைப்படங்களை 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா வெளியிட்டுள்ளது. இந்த போட்டிக்கு உலகம் முழுவதும் இருந்து, சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தங்க மயில் மற்றும் இதர விருதுகளுக்கு இந்த 15 திரைப்படங்களும் போட்டியிடுகின்றன

போட்டியில் பங்கேற்கும் திரைப்படங்கள்:

1. எனி டே நவ் - இயக்குனர்: ஹேமி ரமேசான் / பின்லாந்து

2. சார்லட் - இயக்குனர்: சைமன் பிரான்கோ - பராகுவே

3. கோதாவரி - இயக்குனர்: நிகில் மகாஜன், இந்தியா

4. இன்ட்ரேகால்ட் - இயக்குனர்: ராது முன்டேன் - ரோமானியா

5. லேண்ட் ஆப் ட்ரீம்ஸ் - இயக்குனர்: ஷிரின் நெஷாத் மற்றும் சோஜா அசாரி - நியூமெக்சிகோ, அமெரிக்கா

6. லீடர் - இயக்குநர்: கதியா பிரிவேசென்சேவ் - போலந்து

7. மே வசந்த்ராவ் - இயக்குனர்: நிபுன் அவினாஷ் தர்மாதிகாரி - மராத்தி, இந்தியா

8. மாஸ்கோ டஸ் நாட் ஹேபன் - இயக்குனர்: திமித்ரி பெஃடோரோவ் - ரஷ்யா

9. நோ கிரவுண்ட் பினத் த ஃபீட்- இயக்குனர்: முகமது ராபி மிரிதா - வங்கதேசம்

10. ஒன்ஸ் வீ வேர் குட் பார் யு - இயக்குனர்: பிராங்கோ ஸ்மித் - குரோசியா, போஸ்னியா மற்றும் ஹெர்சேகோவினா

11. ரிங் வாண்ட ரிங் - இயக்குனர் : மசகாசு கனேகோ - ஜப்பான்

12. சேவிங் ஒன் ஹூ வாஸ் டெட் - இயக்குனர்: வேக்லவ் கத்ரன்கா - செக் குடியரசு

13. செம்கோர் - இயக்குனர்: ஏமீ பரூவா - டிமாசா, இந்தியா

14. தி டார்ம் - இயக்குனர்: ரோமன் வாஸ்யனோவ் - ரஷ்யா

15. தி பர்ஸ்ட் ஃபாலன் - இயக்குனர்: ரோட்ரிகோ டி ஒலிவேரா - பிரேசில்

இந்த திரைப்படங்கள் விருதுகளின் பல பிரிவுகளுக்கு போட்டியிடுகின்றன.

சிறந்த திரைப்படத்துக்கான தங்க மயில் விருது ரூ.40,00,000/- பரிசுத் தொகை கொண்டது. இந்த தொகையை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும். அதோடு விருதுக்கான சான்றிதழும் வழங்கப்படும்.

சிறந்த இயக்குனருக்கு வெள்ளி மயில் விருதுடன் சான்றிதழ் மற்றும் ரூ.15,00,000 ரொக்க பரிசும் வழங்கப்படும்.

சிறந்த நடிகருக்கு, வெள்ளி மயில் விருதுடன், சான்றிதழ் மற்றும் ரூ.10,00,000 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.

சிறந்த நடிகைக்கு, வெள்ளி மயில் விருதுடன், சான்றிதழ் மற்றும் ரூ.10,00,000 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.

சிறப்பு நடுவர் விருது: நடுவர் விரும்பும் படத்துக்கு வெள்ளி மயில் விருது சான்றிதழுடன், ரூ.15,00,000-க்கான பரிசும் வழங்கப்படும். இந்த விருது அந்தப்படத்தின் இயக்குனருக்கு வழங்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x