Published : 07 Mar 2016 09:10 PM
Last Updated : 07 Mar 2016 09:10 PM
கோவர்தன் ரெட்டி இயக்கி வரும் 'நாயகி' படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் நடிகை த்ரிஷா.
கோவர்தன் ரெட்டி இயக்கத்தில் த்ரிஷா, கணேஷ் வெங்கட்ராமன், சுஷ்மா ராஜ், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'நாயகி'. இப்படத்தை த்ரிஷாவின் பழைய மேலாளர் கிரிதர் தயாரித்திருக்கிறார்.
'நாயகி' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் தமிழ் உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
மேலும், இப்படத்தின் சிறப்பம்சமாக நாயகி த்ரிஷா பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இதற்கு முன்னர் எந்த படத்திலும் த்ரிஷா பாடியதில்லை. இப்படத்தின் இறுதிகட்ட பணிகளை முடித்து, கோடை விடுமுறைக்கு 'நாயகி'யை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT