விஜய் சேதுபதி மீது தாக்குதல் முயற்சி: வைரலாகும் வீடியோ

விஜய் சேதுபதி மீது தாக்குதல் முயற்சி: வைரலாகும் வீடியோ
Updated on
1 min read

பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை நபர் ஒருவர் தாக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இந்தியில் உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துவரும் 'விக்ரம்' படத்தில் நடித்து வருகிறார்.

பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை நபர் ஒருவர் தாக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. என்ன பிரச்சினை, எதனால் அந்த நபர் விஜய் சேதுபதியைத் தாக்கப் பாய்ந்தார் என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக விஜய் சேதுபதி தரப்பில் விசாரித்தபோது, "இது தொடர்பாக எதுவும் பேச விரும்பவில்லை" என்று கூறினார்கள். தற்போது விஜய் சேதுபதியைத் தாக்க முயன்ற நபரை விமான நிலையத் தொழில் பாதுகாப்புப் படையினர் பிடித்து விசாரித்து வருகின்றார்கள். இந்த வீடியோ பதிவு வைரலாகப் பரவி வருவதால், விரைவில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in