Published : 29 Oct 2021 10:55 AM
Last Updated : 29 Oct 2021 10:55 AM

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் லாரன்ஸ் - எல்வின்

சென்னை

கே.எஸ்.ரவிகுமார் இயக்கவுள்ள புதிய படத்தில் லாரன்ஸ் மற்றும் அவரது தம்பி எல்வின் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இன்று (அக்டோபர் 29) இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், நடன இயக்குநர் ராகவா லாரன்ஸின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டுப் பலரும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், அவர் நடித்து வரும் படத்தின் பிரத்யேக போஸ்டர்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.

ராகவா லாரன்ஸின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏ.ஆர்.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கவுள்ள இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவருடைய தம்பி எல்வின் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர். நாயகனாக எல்வினும், முக்கியக் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸும் நடிக்கவுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆக்‌ஷன், காமெடி, எமோஷன் என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக இது உருவாகிறது. இதில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x