Published : 27 Oct 2021 12:54 PM
Last Updated : 27 Oct 2021 12:54 PM

'விக்ரம்' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் செம்பன் வினோத் ஒப்பந்தம்

கமல் நடிப்பில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தில் நடிக்க செம்பன் வினோத், ஸ்வஸ்திகா கிருஷ்ணன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் அறிமுக டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது மூன்றாம் கட்டப் படப்பிடிப்புக்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

இந்நிலையில் ‘விக்ரம்’ படத்தில் தற்போது பிரபல மலையாள நடிகரான செம்பன் வினோத் ஜோஸ், நடிகை ஸ்வஸ்திகா கிருஷ்ணன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் ஸ்வஸ்திகா கிருஷ்ணன், காளிதாஸ் ஜெயராமுக்கு ஜோடியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் செம்பன் வினோத்தின் கதாபாத்திரம் குறித்துத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விரைவில் சென்னையில் தொடங்கவுள்ள ‘விக்ரம்’ படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பில் இருவரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x