'ஜெய் பீம்' படத்தின் கதைக்களம்

'ஜெய் பீம்' படத்தின் கதைக்களம்
Updated on
1 min read

சூர்யா நடித்துள்ள 'ஜெய் பீம்' படத்தின் கதைக்களம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

தா.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. சூர்யா நாயகனாக நடித்து தயாரித்துள்ளார். தீபாவளி வெளியீடாக அமேசான் ஓடிடி தளத்தில் நவம்பர் 2-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட 'ஜெய் பீம்' படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. 1990-களில் தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் தா.செ.ஞானவேல்.

செங்கேனி மற்றும் ராஜகண்ணு என்ற பழங்குடி ஜோடி வாழ்ந்து வருகிறது. ராஜகண்ணு பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு பின்னர் போலீஸ் காவலில் இருந்து காணாமல் போகும்போது அவர்களின் உலகம் சிதறுகிறது. செங்கேனி தனது கணவனைத் தேடும் முயற்சியில் வக்கீல் சந்துருவின் உதவியை நாடுகிறார். சூர்யாவால் தீவிரமாகச் சித்தரிக்கப்பட்டு, பழங்குடிப் பெண்ணுக்கு நீதியை வழங்குவதற்காகச் சத்தியத்தை வெளிக்கொணர எப்படி முரண்பாடுகளையும் சமாளித்தார் என்பது தான் 'ஜெய் பீம்' படத்தின் கதையாகும்.

இதில் பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ், மணிகண்டன், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிர், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன், சண்டைக் காட்சிகளின் இயக்குநராக அன்பறிவ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in