Published : 24 Oct 2021 15:37 pm

Updated : 24 Oct 2021 15:37 pm

 

Published : 24 Oct 2021 03:37 PM
Last Updated : 24 Oct 2021 03:37 PM

ஓடிடியில் 'என்னங்க சார் உங்க சட்டம்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

yennanga-sir-unga-sattam-release-in-sony-liv-ott

சென்னை

ஓடிடியில் 'என்னங்க சார் உங்க சட்டம்' படம் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

பிரபு ஜெயராம் இயக்கத்தில் ஆர்.எஸ்.கார்த்தி நடித்துள்ள படம் 'என்னங்க சார் உங்க சட்டம்'. பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கரோனா அச்சுறுத்தல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டு, பல்வேறு படங்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. இதனால் சில படங்கள் போதிய திரையரங்குகள் கிடைக்காமல் திணறியும் வருகிறது. இதனை முன்னிட்டு 'என்னங்க சார் உங்க சட்டம்' திரைப்படம் ஓடிடி வெளியீட்டைத் தேர்வு செய்துள்ளது.

சோனி லைவ் நிறுவனம் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது. தற்போது அக்டோபர் 29-ஆம் தேதி 'என்னங்க சார் உங்க சட்டம்' வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக சோனி லைவ் நிறுவனம் அறிவித்துள்ளது.


தவறவிடாதீர்!


Sony livYennanga Sir Unga SattamYennanga Sir Unga Sattam release in sony liv ottOne minute newsஎன்னங்க சார் உங்க சட்டம்என்னங்க சார் உங்க சட்டம் வெளியீடுசோனி லைவ்பிரபு ஜெயராம்ஆர்.எஸ்.கார்த்தி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x