Published : 21 Oct 2021 01:31 PM
Last Updated : 21 Oct 2021 01:31 PM

'விக்ரம் வேதா' இந்தி ரீமேக் படப்பிடிப்பைப் பார்த்து மலைத்த மாதவன்

'விக்ரம் வேதா' இந்தி ரீமேக் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்று பார்வையிட்டுள்ளார் மாதவன்

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு அரபு நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியிலும் 'விக்ரம் வேதா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தினை ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் நிறுவனம், டி-சீரிஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்து வருகின்றன. புஷ்கர் - காயத்ரி இயக்கி வரும் இந்தப் படத்தில் மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்து வருகிறார்கள்.

இதன் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றுள்ளார் மாதவன். இதனை தயாரிப்பாளர் சஷிகாந்த் தனது ட்விட்டர் பதிவில் புகைப்படத்துடன் உறுதி செய்துள்ளார்.

சஷிகாந்த்தின் ட்வீட்டைக் குறிப்பிட்டு நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்தப் படத் தயாரிப்புக்காக நீங்கள் செய்திருக்கும் விஷயங்களைப் பார்த்து மலைத்துப் போயிருக்கிறேன். ஹ்ரித்திக்கைப் பார்த்தால், உலகை ஆளுபவர் போலத் தெரிகிறது. என்ன ஒரு உடல் மொழி, தோற்றம் ! அட !! இந்தப் படம் வரலாற்றில் இடம்பிடிக்கும் என்று இப்போதே எழுதப்பட்டுவிட்டது"

இவ்வாறு மாதவன் தெரிவித்துள்ளார்.

— Ranganathan Madhavan (@ActorMadhavan) October 21, 2021

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x