Published : 17 Oct 2021 05:44 PM
Last Updated : 17 Oct 2021 05:44 PM
விஷால் நடித்து வரும் புதிய படத்துக்கு 'லத்தி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எனிமி'. இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து 'வீரமே வாகை சூடும்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் விஷால்.
இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் ஏ.வினோத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஷால். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுற்றுள்ளது. இது விஷால் நடிப்பில் உருவாகும் 32-வது படமாகும்.
இந்தப் படத்துக்கு 'லத்தி' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் தயாராகவுள்ளது. இதில் விஷாலுக்கு நாயகியாக சுனைனா நடித்து வருகிறார். பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
'லத்தி' படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியெம், இசையமைப்பாளராக சாம் சி.எஸ், சண்டைக் காட்சிகளின் இயக்குநராக திலீப் சுப்பராயன், எடிட்டராக என்.பி.ஸ்ரீகாந்த் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
Here we go!!!
— Vishal (@VishalKOfficial) October 17, 2021
The official #Title teaser of #Vishal32 is out now!
https://t.co/JIyuF5nHYd#LaththiCharge #Laththi@_RanaProduction @dir_vinothkumar @actorramanaa @nandaa_actor @balasubramaniem @SamCSmusic @dhilipaction @TheSunainaa @skannanartdir @HariKr_official pic.twitter.com/H71asg52kM
Sign up to receive our newsletter in your inbox every day!