Published : 15 Oct 2021 04:29 PM
Last Updated : 15 Oct 2021 04:29 PM

நானி - கீர்த்தி சுரேஷ் இணையும் தசரா

ஹைதராபாத்

நானி, கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கவுள்ள படத்துக்கு 'தசரா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

'டக் ஜெகதீஷ்' படத்தைத் தொடர்ந்து 'ஷ்யாம் சிங்கா ராய்' படப்பிடிப்பை முடித்துள்ளார் நானி. அதனைத் தொடர்ந்து 'அன்டே சுந்தரானிகி' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் நாயகியாக நஸ்ரியா நடித்து வருகிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து நானியின் அடுத்த படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (அக்டோபர் 15) வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்துக்கு 'தசரா' எனப் பெயரிட்டுள்ளனர்.

இதில் நானிக்கு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இந்த ஜோடி இதற்கு முன்பாக 'நேனு லோக்கல்' படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 'தசரா' படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இந்தப் படம் தொடர்பான அறிவிப்பை, சின்ன வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இதில் நானியின் லுக்கிற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x