Published : 11 Oct 2021 06:29 PM
Last Updated : 11 Oct 2021 06:29 PM

ஓடிடியில் ஓ மணப்பெண்ணே வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

சென்னை

ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 'ஓ மணப்பெண்ணே' திரைப்படம் வெளியாகும் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படம் ‘பெல்லி சூப்புலு’. தருண் பாஸ்கர் இயக்கிய இந்தப் படத்தில், ரீத்து வர்மா நாயகியாக நடித்திருந்தார். ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், இந்தி மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படத்தைத் தமிழில் 'ஓ மணப்பெண்ணே' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இதில் ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.எல்.விஜய்யிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த கார்த்திக் சுந்தர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சென்னையிலேயே ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்து, இறுதிக்கட்டப் பணிகளையும் முடித்துவிட்டது படக்குழு.

கரோனா அச்சுறுத்தல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டாலும், தொடர்ச்சியாகப் பல்வேறு படங்கள் வெளியாகி வருகின்றன. இதனால் 'ஓ மணப்பெண்ணே' படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடவுள்ளது படக்குழு. இதன் நேரடி டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளது.

தற்போது இந்தப் படம் அக்டோபர் 22-ம் தேதி வெளியாகும் என்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் அறிவித்துள்ளது. விரைவில் ட்ரெய்லர் மற்றும் பாடல்களை வெளியிட்டுப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தவுள்ளது படக்குழு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x