Published : 08 Oct 2021 01:32 PM
Last Updated : 08 Oct 2021 01:32 PM

இந்தியில் ரீமேக் ஆகும் 'மெட்ராஸ்'?

சென்னை

கார்த்தி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'மெட்ராஸ்' திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.

பா.இரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி, கலையரசன், கத்ரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மெட்ராஸ்'. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படம் 2014-ம் ஆண்டு வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.

தற்போது இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளார் ஞானவேல்ராஜா. இதற்காக முன்னணி நிறுவனத்துடன் ஒப்பந்தத்திற்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

'மெட்ராஸ்' படம் மட்டுமன்றி, ஆர்யா நடிப்பில் வெளியான 'டெடி' படத்தின் இந்தி ரீமேக்கிற்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு படங்களின் ரீமேக்கின் மூலம் இந்தியிலும் படத் தயாரிப்பில் ஈடுபடவுள்ளது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x