Published : 06 Oct 2021 03:32 PM
Last Updated : 06 Oct 2021 03:32 PM

ஹன்சிகா நடிப்பில் உருவாகும் ரவுடி பேபி

சென்னை

தமிழில் ஹன்சிகா நடிப்பில் 'ரவுடி பேபி' என்ற புதிய படம் தொடங்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் வெளியான 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா. அதனைத் தொடர்ந்து தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் நாயகியாக நடித்துள்ளார். அவருடைய 50-வது படமாக 'மஹா' உருவாகியுள்ளது.

ஜமீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிலம்பரசன், ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விரைவில் இந்தப் படத்தின் வெளியீடு குறித்த அதிகாரபூர்வத் தகவல் வெளியாகும் எனத் தெரிகிறது.

இதற்கிடையே, தனது அடுத்த தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் ஹன்சிகா. பல்வேறு இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ராஜா சரவணன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

'ரவுடி பேபி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பைக் கவிஞர் வைரமுத்து தொடங்கிவைத்தார். இதில் ஹன்சிகாவுடன் சத்யராஜ், மீனா, ராம்கி, சோனியா அகர்வால், ராய் லட்சுமி, ஜான் கொக்கென் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக செல்லதுரை, இசையமைப்பாளராக சாம் சி.எஸ். ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

'ரவுடி பேபி' படத்தை அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை தயாரித்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x