Last Updated : 23 Mar, 2016 04:40 PM

 

Published : 23 Mar 2016 04:40 PM
Last Updated : 23 Mar 2016 04:40 PM

ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகும் ஜோக்கர்

ராஜூமுருகன் இயக்கத்தில் சோம சுந்தரம் நடித்திருக்கும் 'ஜோக்கர்' திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிவடைந்தன.

'குக்கூ' படத்தைத் தொடர்ந்து ராஜூமுருகன் இயக்கும் புதிய படத்தின் பணிகள் துவங்கப்பட்டது. அப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் உள்ளிட்ட தகவல்கள் எதையுமே படக்குழு தெரிவிக்கவில்லை. ஒட்டுமொத்த படப்பிடிப்பு, இறுதிகட்ட பணிகள் என அனைத்தையுமே முடித்துவிட்டது 'ஜோக்கர்' படக்குழு.

இப்படத்தின் நாயகனாக சோமசுந்தரம் நடித்திருக்கிறார். 'ஆரண்ய காண்டம்' மற்றும் 'ஜிகர்தண்டா' போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர் சோமசுந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நாயகனாக நடிக்கும் முதல் படம் 'ஜோக்கர்'. நாயகிகளாக புதுமுகங்கள் காயத்ரி மற்றும் ரம்யா நடித்திருக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்து வரும் இப்படத்துக்கு செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ட்ரீம் வாரியர் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.

தற்போது இறுதிகட்ட பணிகளில் இருக்கும் 'ஜோக்கர்' விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x