Published : 01 Oct 2021 07:07 PM
Last Updated : 01 Oct 2021 07:07 PM

கமல் - வெற்றிமாறன் படத்தை உறுதி செய்த ஸ்ரீப்ரியா

சென்னை

கமல் - வெற்றிமாறன் இணைந்து பணிபுரிய இருப்பதை ஸ்ரீப்ரியா அளித்துள்ள பேட்டியில் உறுதி செய்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'விக்ரம்'.

இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கவுள்ளது படக்குழு.

இந்தப் படத்துக்குப் பிறகு கமலின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. அதில் வெற்றிமாறன் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ளார் என்பதும் ஒன்று. தற்போது இந்தக் கூட்டணியை ஸ்ரீப்ரியா அளித்துள்ள பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

'பாபநாசம் 2' குறித்த கேள்விக்கு ஸ்ரீப்ரியா, "'பாபநாசம் 2' படம் பண்ணும் அளவுக்கு கமல் சாருக்கு நேரமில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் என பிசியாக இருக்கிறார். மேலும் 'விக்ரம்' மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்கவுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

கமல் - வெற்றிமாறன் கூட்டணி இணையும் படத்தினை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 'வாடிவாசல்' படத்தை முடித்துவிட்டு, கமல் நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்குவார் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x