Published : 20 Sep 2021 16:16 pm

Updated : 20 Sep 2021 18:00 pm

 

Published : 20 Sep 2021 04:16 PM
Last Updated : 20 Sep 2021 06:00 PM

'டான்' அப்டேட்: கெளதம் மேனன் ஒப்பந்தம்

gautham-menon-doing-a-cameo-role-in-sivakarthikeyan-starring-don

சென்னை

'டான்' படத்தில் சிவகார்த்திகேயனுடன் கவுரவக் கதாபாத்திரத்தில் கெளதம் மேனன் நடித்துள்ளார்.

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'டான்'. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகின்றன. இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இதில் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், ஆர்.ஜே.விஜய், சிவாங்கி உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார்கள். தற்போது இதில் கவுரவக் கதாபாத்திரத்தில் கெளதம் மேனனும் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் - கெளதம் மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளை சமீபத்தில் படமாக்கி முடித்துள்ளது படக்குழு. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக கே.எம்.பாஸ்கரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.


தவறவிடாதீர்!


டான்டான் அப்டேட்சிவகார்த்திகேயன்கெளதம் மேனன்சிபி சக்ரவர்த்திபிரியங்கா அருள் மோகன்சமுத்திரக்கனிஎஸ்.ஜே.சூர்யாசூரிOne minute newsDonDon updateSivakarthikeyanGautham menonCibi chakaravarthiPriyanka arul mohanSamuthirakaniSjsuriyaSoori

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x