Published : 19 Sep 2021 19:25 pm

Updated : 19 Sep 2021 20:39 pm

 

Published : 19 Sep 2021 07:25 PM
Last Updated : 19 Sep 2021 08:39 PM

சூர்யாவின் 2 படங்களுக்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்

gvprakash-to-do-music-for-two-suriya-films

சென்னை

சூர்யா நடிக்கவுள்ள 2 படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் 'சூரரைப் போற்று'. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராகப் பணிபுரிந்தார் ஜி.வி.பிரகாஷ். அவருடைய பாடல்கள் மற்றும் பின்னணி இசை என அனைத்தும் கொண்டாடப்பட்டன. சில தினங்களுக்கு முன்பு, இந்தப் படத்தின் பாடல் குறித்து இந்தி திரையுலகின் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் சூர்யா நடிக்கவுள்ள 2 படங்களுக்கு இசையமைக்கவுள்ளார் ஜி.வி.பிரகாஷ். வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள 'வாடிவாசல்' படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்தான். இதனைப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது.

இந்தப் படத்துக்கு முன்பாகவே, பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் பணிபுரியவுள்ளார். இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சூர்யாவின் 2டி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது. தற்போது சூர்யாவுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. நவம்பரில் படப்பிடிப்புக்குச் செல்லப் படக்குழு தயாராகி வருகிறது.


தவறவிடாதீர்!


சூர்யாஜி.வி.பிரகாஷ்வாடிவாசல்வெற்றிமாறன்பாலாஜி.வி.பிரகாஷ் திட்டம்ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம்2டி நிறுவனம்One minute newsSuriyaGvprakashGvprakash plansVetrimaranBalaVaadi vasal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x