Published : 18 Sep 2021 22:18 pm

Updated : 18 Sep 2021 22:25 pm

 

Published : 18 Sep 2021 10:18 PM
Last Updated : 18 Sep 2021 10:25 PM

'கள்ளபார்ட்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

aravind-swami-starring-kallapart-first-look-released

சென்னை

அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியுள்ள 'கள்ளபார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

'என்னமோ நடக்குது', 'அச்சமின்றி' ஆகிய படங்களை இயக்கியவர் ராஜபாண்டி. அவருடைய இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படம் 'கள்ளபார்ட்'. இதில் அரவிந்த்சாமி, ரெஜினா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'ஸ்கெட்ச்' படத்தை தயாரித்த மூவிங் ஃபிரேம் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. ராதாகிருஷ்ணன் வசனம் எழுதியுள்ள இந்தப் படத்துக்கு, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


தவறவிடாதீர்!


KallapartKallapart first lookRajapandiAravind swamiReginaOne minute newsகள்ளபார்ட்கள்ளபார்ட் ஃபர்ஸ்ட் லுக்ராஜபாண்டிஅரவிந்த் சுவாமிரெஜினா

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x