Published : 17 Sep 2021 17:27 pm

Updated : 17 Sep 2021 17:30 pm

 

Published : 17 Sep 2021 05:27 PM
Last Updated : 17 Sep 2021 05:30 PM

மீண்டும் இணைகிறது ரஜினி - சிவா கூட்டணி?

rajini-and-siva-join-hands-again

சென்னை

சிவா இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தீபாவளிக்குத் திரைக்கு வரவுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

'அண்ணாத்த' படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி, இயக்குநர் சிவாவை வெகுவாகப் பாராட்டியுள்ளார். மேலும், மீண்டும் இணைந்து இன்னொரு படம் பண்ணலாம் என்று கேட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காகத் தன்னிடம் உள்ள கதைகளில் ரஜினிக்கு ஏற்றவாறு ஒரு கதையை சிவா மாற்றிவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

இது தொடர்பாக விசாரித்தபோது, " 'விஸ்வாசம்' படத்துக்குப் பிறகு, சூர்யா நடிக்கும் படத்தைத்தான் சிவா இயக்கவிருந்தார். இதனை ஸ்டியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இருந்தது. பின்பு ரஜினி படம் என்றவுடன், அதனை இயக்கிவிட்டு வருமாறு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தெரிவித்தது. இது தொடர்பாக ரஜினி - ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமும் பேசிக் கொண்டார்கள்.

ஆகையால், 'அண்ணாத்த' படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்தைத்தான் இயக்கவுள்ளார் சிவா. இதன் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தற்போது சூர்யாவுடன் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இயக்குநர்கள் பாலா, சிவா ஆகியோரின் படங்களில் மாறி மாறி நடிப்பது போன்று தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா" என்று தெரிவித்தார்கள்.


தவறவிடாதீர்!


சிவாரஜினிரஜினிகாந்த்ரஜினி - சிவா கூட்டணிசன் பிக்சர்ஸ்அண்ணாத்தசூர்யாசூர்யா - சிவா கூட்டணிOne minute newsRajiniSivaDirector sivaRajinikanthRajini - siva teamSiva teamSun picturesAnnaattheeSuriya

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x