Published : 17 Sep 2021 16:59 pm

Updated : 17 Sep 2021 16:59 pm

 

Published : 17 Sep 2021 04:59 PM
Last Updated : 17 Sep 2021 04:59 PM

'வலிமை' டீஸர், பட வெளியீடு எப்போது?

valimai-teaser-update

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' படத்தின் டீஸர் மற்றும் படத்தின் வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தின் தமிழக உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் கைப்பற்றியுள்ளார்.

இந்தப் படம் முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், 'அண்ணாத்த' படம் வெளியாகவுள்ளதால் அன்றைய தினத்தில் வெளியாகுமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். மேலும், படத்தின் டீஸர் அடுத்த வாரம் வெளியாகும் என்று படக்குழுவினரிடம் விசாரித்தபோது தெரிவித்தார்கள்.

எந்தத் தேதியில் வெளியீடு என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. அந்த டீஸருடன் வெளியீட்டுத் தேதி அல்லாமல் மாதத்தை மட்டும் அறிவிக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள சூழலில் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 23-ம் தேதி படத்தை வெளியிடலாமா என்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஏனென்றால், 2022-ம் ஆண்டு பொங்கல் வரை எந்தவொரு பெரிய படமும் வெளியாகாது என்பதால் சரியாக இருக்கும் என்று கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் கணித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை அனைத்துமே முடிந்து, டீஸருடன் வெளியீடு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்பது மட்டும் உறுதி.


தவறவிடாதீர்!


ValimaiValimai teaserAjithHvinothValimai teaser updateBoney kapoorOne minute newsGopuram filmsValimai releaseவலிமைஅஜித்வலிமை டீஸர்ஹெச்.வினோத்வலிமை டீஸர் அப்டேட்போனி கபூர்கோபுரம் பிலிம்ஸ்வலிமை வெளியீடு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x