Published : 14 Sep 2021 11:55 am

Updated : 14 Sep 2021 11:55 am

 

Published : 14 Sep 2021 11:55 AM
Last Updated : 14 Sep 2021 11:55 AM

‘தலைவி’ படக்குழுவினருக்கு ரஜினி பாராட்டு

rajinikanth-praises-thalaivii-team

‘தலைவி’ படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடித்துள்ளார். இவருடன் அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த ஞாயிறு (செப். 12) அன்று ‘தலைவி’ படம் தனிப்பட்ட முறையில் பிரத்யேகமாக நடிகர் ரஜினிகாந்துக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் நடிகை கங்கணா ரணாவத், அரவிந்த்சாமி, சமுத்திரக்கனி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கு தனது வாழ்த்தை ரஜினி தெரிவித்துள்ளார். இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.


தவறவிடாதீர்!


ThalaiviiRajinikanthRajinikanth praises Thalaivii Teamரஜினிதலைவிரஜினிகாந்த்கங்கணா ரணாவத்ரவிந்த்சாமி மதுபாலா சமுத்திரக்கனிஏ.எல்.விஜய்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x