Last Updated : 02 Feb, 2016 03:27 PM

 

Published : 02 Feb 2016 03:27 PM
Last Updated : 02 Feb 2016 03:27 PM

குயின் தமிழ் ரீமேக்: ரேவதி இயக்கத்தில் சுஹாசினி வசனம்

'குயின்' படத்தின் தமிழ் ரீமேக்கை ரேவதி இயக்க, அப்படத்தின் தமிழ் வசனங்களை எழுத இருக்கிறார் சுஹாசினி

மார்ச் 2014ல் விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ராவத் நடிப்பில் வெளியான படம் 'குயின்'. அனுராக் காஷ்யப் மற்றும் விக்கிரமாதித்யா தயாரித்த இப்படத்தினை வயாகாம் நிறுவனம் வெளியிட்டது. விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமைகளை வாங்கியிருக்கிறார் தியாகராஜன். இப்படத்தில் கங்கனா ராவத் வேடத்தில் நடிக்க முன்னணி நடிகைகள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இப்படத்தை யார் இயக்கவிருக்கிறார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.

இந்நிலையில், பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் 'குயின்' தமிழ் ரீமேக்கிற்கு தான் வசனம் எழுதவிருப்பதாகவும், ரேவதி இயக்க இருப்பதாகவும் சுஹாசினி மணிரத்னம் கூறியிருக்கிறார்.

'குயின்' படத்தின் கதைக்களம்:

"24 வயது நிரம்பிய பஞ்சாப் பெண் ராணி(கங்கனா ராவத்). வெளி உலகம் தெரியாமல் வளர்ந்த ராணியின் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், அவரது வருங்காலக் கணவன் 'நமது திருமணம் நடைபெறாது. நமது இருவரின் வாழ்க்கை வெவ்வேறு பாதைகள் கொண்டது' என்று கூறிவிடுகிறார்.

திருமணத்திற்குப் பிறகு தேனிலவிற்கு பாரீஸ் (ராணியின் ஆசை) மற்றும் ஆம்ஸ்டர்டாம் (கணவரின் ஆசை) நகர்களுக்கு செல்ல முன்னர் திட்டமிட்டிருக்கிறார்கள். ஹனிமூனுக்கு போகவேண்டிய டிக்கெட்களில் தனியாகச் செல்கிறார் ராணி. அங்கு ராணியின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதும், அந்த பயணத்திற்குப் பிறகு இந்தியா திரும்பும் ராணியை திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கும் (நிச்சயிக்கப்பட்ட) மணமகனுக்கு, ராணி சொல்லும் பதில் என்ன?" என்பதுவும் தான் 'குயின்' படத்தின் கதை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x