Published : 01 Sep 2021 04:54 PM
Last Updated : 01 Sep 2021 04:54 PM
விஷால் நடித்து வரும் புதிய படத்தின் நாயகியாக சுனைனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வீரமே வாகை சூடும்' படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டார் விஷால். இதனை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் இசையமைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தனது நண்பர்களான ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கினார் விஷால். இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் 29 அன்று விஷால் பிறந்த நாளை முன்னிட்டு பூஜையுடன் தொடங்கப்பட்டது.
இது விஷால் நடிப்பில் உருவாகும் 32-வது படமாகும். இதனை அறிமுக இயக்குநர் வினோத்குமார் இயக்கவுள்ளார். முழுக்க ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியெம், சண்டைக் காட்சிகளின் இயக்குநராக திலீப் சுப்பராயன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்தப் படத்தில் விஷாலுக்கு நாயகியாக சுனைனா நடித்து வருகிறார். ரமணா மற்றும் நந்தா இருவரும் தங்களுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு 'ராணா புரொடக்ஷன்ஸ்' எனத் தலைப்பிட்டுள்ளனர். இந்த நிறுவனம்தான் விஷால் தொகுத்து வழங்கிய 'சன் நாம் ஒருவர்' நிகழ்ச்சியைத் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
Here we go!!!
— Vishal (@VishalKOfficial) September 1, 2021
Catch a glimpse of #Vishal32 launch from #Aug29.https://t.co/Ye1uxB5Qwj#GlimpseOfVishal32 #Launch #V32 pic.twitter.com/EpPwshq18u
Sign up to receive our newsletter in your inbox every day!