இந்தியில் அறிமுகமாகும் மகேஷ் நாராயணன்

இந்தியில் அறிமுகமாகும் மகேஷ் நாராயணன்
Updated on
1 min read

முதல் முறையாக இந்திப் படமொன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் இயக்குநர் மகேஷ் நாராயணன்.

மலையாளத்தில் மகேஷ் நாராயணன் இயக்கிய படம் ‘மாலிக்’. இப்படத்தில் ஃபகத் பாசில், நிமிஷா சஜயன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சமீபத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் முதல் முறையாக இயக்குநர் மகேஷ் நாராயணன் இந்தியில் அறிமுகமாகவுள்ளார். டஸ்க் டேல் பிலிம்ஸ் சார்பில் ப்ரீத்தி ஷஹானி தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு ‘ஃபேந்தம் ஹாஸ்பிட்டல்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகவுள்ளது.

இப்படம் குறித்து மகேஷ் நாராயணன் கூறியதாவது:

''இந்திய சுகாதாரத் துறையில் நிகழ்ந்துள்ள ஊழல் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இக்கதை என்னை வெகுவாக ஈர்த்தது. ப்ரீத்தி ஷஹானி ஒரு தயாரிப்பாளராக தரமான திரைப்படங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறார். மேலும் புலனாய்வு பத்திரிகையாளர் ஜோசி ஜோசப்பின் நுணுக்கமான நிஜத்தை பிரதிபலிக்கும் ஒரு திரைக்கதையில் இவர்களுடன் இணைந்து எனது முதல் இந்திப் படத்தை இயக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்''.

இவ்வாறு மகேஷ் நாராயணன் கூறியுள்ளார்.

இப்படத்தின் திரைக்கதையை ஆகாஷ் மொஹிமன் மற்றும் மகேஷ் நாராயணன் இணைந்து எழுதியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in