Published : 28 Aug 2021 05:21 PM
Last Updated : 28 Aug 2021 05:21 PM

நயன்தாரா படத்தில் விதார்த், ஸ்ரீ

சென்னை

யுவராஜ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவுள்ள படத்தில் விதார்த் மற்றும் ஸ்ரீ இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் நயன்தாரா. இதில் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விக்னேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு முதலில் தொடங்கப்பட்டது. சென்னை மற்றும் கோவையில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

தற்போது மற்றொரு படத்தின் படப்பிடிப்பையும் சத்தமின்றி தொடங்கியுள்ளது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம். இதனை 'எலி', 'தெனாலிராமன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவராஜ் இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா இல்லாத காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறது படக்குழு.

இந்தப் படத்தில் விதார்த் மற்றும் ஸ்ரீ இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதில் தொழில்நுட்பக் கலைஞர்களாக யார் பணிபுரிந்து வருகிறார்கள் என்பதைப் படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. முதலில் விக்னேஷ் படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு, யுவராஜ் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் நயன்தாரா.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x