Published : 08 Feb 2016 08:28 AM
Last Updated : 08 Feb 2016 08:28 AM

ஆட்சி, அதிகாரங்கள் கருத்து சுதந்திரத்தில் தலையிடக்கூடாது: ஹார்வர்டு பல்கலையில் கமல் பேச்சு

கருத்து சுதந்திரத்தில் ஆட்சி, அதிகாரங்கள் தலையிடக்கூடாது என்று அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக மாநாட்டில் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

‘இந்தியா எதிர்நோக்கியுள்ள வாய்ப்புகள், சவால்கள்’ என்ற தலைப்பிலான 2 நாள் மாநாடு அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல் மற்றும் ஹார்வர்டு கென்னடி ஸ்கூல் வளாகத்தில் 6,7-ம் தேதி களில் நடந்தது. ஹார்வர்டு பல் கலைக்கழகத்தின் பட்டதாரி மாண வர்கள் இந்த மாநாட்டை நடத்தினர். இதில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், முன்னாள் வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், நடிகர் கமல்ஹாசன், இந்தி இயக்குநர் கரண் ஜோகர் உள்ளிட்ட பிர பலங்கள் கலந்து கொண்டனர்.

‘இந்தியாவில் கருத்து சுதந் திரம்’ என்ற தலைப்பில் கமல்ஹா சன் நேற்று முன்தினம் இரவு பேசினார். அவர் கூறியதாவது:

‘கருத்து சுதந்திரத்தின் ஒரே காவலன்’ என்று ஜனநாயகத்தை புகழ்வார்கள். ஆனால், ஜனநாய கம் என்பது ஒரு ஆட்சிமுறை, அவ்வளவுதான். ஜனநாயகம் மூல மாகத்தான் ஜெர்மனியில் ஹிட்லர் அதிகாரம் பெற்றார். இந்தியாவி லும் ஜனநாயகம் மூலமாகத்தான் அவசரநிலை பிரகடனம் செய்யப் பட்டு, அனைத்து குரல்களும் ஒடுக்கப்பட்டன.

ஜனநாயக நாடாக இருந்தாலும் கூட, கருத்து சுதந்திரத்தை காப் பாற்ற வேண்டுமானால், அங்கும் அதிக விழிப்புடன் கண்காணித் துக்கொண்டே இருப்பது அவசி யம்.

இரக்கப்பட்டு கொடுத்து, வாங்கி வைத்துக்கொள்வது அல்ல கருத்து சுதந்திரம். உண்மை யான கருத்து சுதந்திரம் கொண் டதுதான் உண்மையான ஜனநாய கம். இந்திய ஜனநாயகம் குறித்து தவறாக கூறவில்லை. உண்மை யில், அதை பெருமையாக கருது கிறோம். ஜனநாயக நாடு என்ற பெருமிதத்தோடு இருந்துவிடா மல், கருத்து சுதந்திர விஷயத்தில் உலக நாடுகள் அனைத்துக்கும் இந்தியா உதாரணமாக விளங்க வேண்டும். கருத்து சுதந்திரத்துக் கான வரையறையை உருவாக்கும் நாடாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

ஒருகாலத்தில், வேற்றுமையில் ஒற்றுமை என்று நேருஜி எதை கூறினாரோ, வெகு வேகமாக அதில் இருந்து விலகிக்கொண்டி ருக்கிறோம். அரசியலில் மதம் நுழைவது ஆரோக்கியமானது அல்ல. அதேபோல, கருத்து சுதந் திரத்திலும் அரசியல், ஆட்சி, அதி காரம் போன்றவை தலையிடாமல் விலகி இருப்பதே நல்லது.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x