Published : 07 Aug 2021 04:22 PM
Last Updated : 07 Aug 2021 04:22 PM

'பீஸ்ட்' அப்டேட்: செல்வராகவன் ஒப்பந்தம்

சென்னை

விஜய் நடித்துவரும் 'பீஸ்ட்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் செல்வராகவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

ஜார்ஜியாவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. பின்னர் சென்னையில் 2-வது கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் பாடல் ஒன்றும், சில காட்சிகளும் படமாக்கப்பட்டன. தற்போது சென்னையிலேயே 3-வது கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் விஜய், பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள்.

விஜய், பூஜா ஹெக்டே, யோகி பாபு தவிர்த்து இதில் யாரெல்லாம் விஜய்யுடன் நடிக்கிறார்கள் என்பதைப் படக்குழு அறிவிக்காமலேயே இருந்தது. தற்போது விஜய்யுடன் செல்வராகவன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிவரும் 'சாணிக் காயிதம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகவுள்ளார் செல்வராகவன்.

'சாணிக் காயிதம்' படத்தைத் தொடர்ந்து, செல்வராகவன் ஒப்பந்தமாகியுள்ள படமாக 'பீஸ்ட்' அமைந்துள்ளது. இதில் விஜய்க்கு வில்லனாக செல்வராகவன் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை படப்பிடிப்பை முடித்துவிட்டு, ரஷ்யாவில் முக்கியமான சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்க 'பீஸ்ட்' படக்குழு திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x