Last Updated : 04 Feb, 2016 11:37 AM

 

Published : 04 Feb 2016 11:37 AM
Last Updated : 04 Feb 2016 11:37 AM

இதுதான் நான் 11: 50 சதவீதம் பாய்ஸ்... 50 சதவீதம் கேர்ள்ஸ்... சமநிலை டான்ஸர்ஸ்கிட்டதான்!

எங்க வீட்டுக்கு ரிகர்சலுக்கு வர்ற டான்ஸர்களைப் பார்க்குறப்போ ரொம்ப ஜாலியா இருக்கும். அதுவும் ஆனந்த் பாபு சார் மாதிரி ஹீரோவெல்லாம் வீட்டுக்கு வந்தா எப்படியிருக்கும்!? அவர், அவர்கூட ஆடுற டான்ஸர், இன்னும் வேற வேற ஆர்டிஸ்ட் இவங்க எல்லாம் ஆடுறதை கொஞ்ச நேரம் பார்த்துக்கிட்டே இருக்க முடியாதான்னு நெனைச்சிருக்கேன். ஆனா, அதை அப்பாகிட்ட கேட்டா திட்டுவாரோன்னு ஒரு பயம். அதனால கேட்டதே இல்லை. ரிகர்சல் கிளாஸ் பரபரப்பா நடக்குறப்ப. அப்பா திடீர்னு குடிக்க தண்ணி கேட்பார். எங்களுக்கு ஜாலியா இருக்கும். ஏன்னா, அதை காரணமா வெச்சி கொஞ்ச நேரம் டான்ஸ் பார்க்கலாமேன்னுதான்.

எனக்கு டான்ஸர்களைப் பார்க்குறப்ப ஆச்சர்யமா இருக்கும். அவங்கள ஹீரோ மாதிரிதான் நெனைச்சேன். அவங்க எப்ப வும் சின்ஸியரா இருப்பாங்க. அப்படி வேலை பார்ப்பாங்க. சந் தோஷமா இருப்பாங்க. இருந்தாலும், டான்ஸர்களோட உலகம் 10 வருஷத்துல இருந்து 15 வருஷம் வரைக்கும்தான். அந்தக் காலகட்டம்தான் அவங்களுக்கு ரொம்ப அழகா இருக்கும். அதன் பிறகு வயசு, ஹெல்த் பிரச்சினை, புது டான்ஸ் ஸ்டைல், புதிய மாஸ்டர்னு நிறைய மாறும். டான்ஸர்கள் 90 சதவீதம் பேர் எதிர்காலத்தைப் பத்தி பிளான் பண்றதே இல்லை. அப்படி பண்றது நல்லதுனு நினைக்கிறேன். ஸ்போர்ட்ஸ்மேன் மாதிரிதான் டான்ஸர்களும். ஒரு காலகட்டம்தான் ஓட முடியும். அதுக்குள்ள என்னெவெல்லாம் முடி யுதோ, சாதிக்கணும்.

அப்போ எல்லாம் எங்க வீட்டு முன் னால தினமும் காலையில அஞ்சரை மணிக்கெல்லாம் பத்து, பதினைஞ்சு பேர் வந்து நிப்பாங்க. அப்பா ஷூட்டிங்குக்கு 7 மணிக்கு புறப்படுவார். நிக்கிறவங்க ‘வேலை கொடுங்க’னு கூட கேட்க மாட்டாங்க. வருஷத்துல பல நாட்கள் அப்படியே வந்து நிப்பாங்க. அப்பாவோட டான்ஸ் குரூப்ல சேர்றது ரொம்ப கஷ் டம். நடிகராவது எவ்வளவு கஷ்டமோ, டான்ஸர் ஆகுறதும் அப்போ அவ்வளவு கஷ்டம். ஒரு கட்டத்துல அப்பா அவங் களை சேர்த்துப்பார். முதல்ல கடைசி லைன்ல நிக்க வைப்பார். அதுல பெஸ்ட் காட்டினதும் மூணாவது வரிசை. அப் புறம் ரெண்டாவது. அதுக்கப்புறம் தான் முதல் லைனுக்கு வருவாங்க. அதிலேர்ந்து புரொமோஷன்லதான் அசிஸ்டென்ட் டான்ஸராவாங்க. ஆனா, அசிஸ்டென்ட்க்கு டான்ஸர்ஸை விட வேலை மூணு மடங்கு கஷ்டம். பெண்ட் நிமிந்துடும். டான்ஸ் ஆடுறது எவ்வளவு ஜாலியான விஷயமோ, அதேபோல அது சீரியஸானதும்கூட.

டான்ஸர் எப்பவுமே வீட்ல இருக் குற கஷ்டத்தைக் காட்டிக்கவே மாட் டாங்க. எனக்குத் தெரிஞ்சு பல கேர்ள்ஸ் டான்ஸர் தன்னோட வருமானத்துல அக்கா, தம்பிகளோட படிப்பு வரைக் கும் கவனிச்சிப்பாங்க. தன்னோட தங்கைக்குக் கல்யாணம் பண்ணி வெச்சிட்டு, லேட்டா கல்யாணம் பண்ணிக் கிட்ட டான்ஸர்கள் பலரை எனக்குத் தெரியும். ஷூட்டிங்ல விதவிதமா டிரெஸ் போட்டுட்டு ஆடுவாங்க. ஆனா, வீட்ல அடிப்படை தேவைகூட இல்லாம வாழ் வாங்க. அவங்களோட வருமானத்தை நம்பி வீட்ல ஒரு பெரிய பட்டாளமே காத் திருக்கும். உறவுக்காரங்க யாருக்கும் ஏதாவது ஆச்சுன்னா ஆபீஸ்ல லீவ் போட்டுட்டு போயிடலாம். ஆனா, டான்ஸர் அப்படி செய்ய முடியாது. அந்த சோகத்தை மறந்து சிரிச்சுக்கிட்டு ஆடியாகணும். அப்போதான் அவங் களுக்கு பணம் வரும். அந்தப் பணத் துலதான் அந்தக் கஷ்டத்தைப் போக்க முடியும். நிஜமாவே, டான்ஸர்களோடது தனி உலகம். இது பைட்டர்ஸுக்கும் பொருந்தும். அவங்களும் தன்னை அர்பணிச்சுக்கிட்டு குடும்பத்தைக் காப்பாத்துறவங்கதான்.

பெரும்பாலும் வெளியில வேலைக்கு போகிற ஃபிரெண்ட்ஸ்ங்க அங்கே கூடு றப்ப மட்டும் ஃபிரெண்ட்ஸா இருப்பாங்க. அதுவே ஸ்கூல் ஃபிரெண்ட்ஸ்னு எடுத் துக்கிட்டா எப்பவும் ரொம்ப உயிரா இருப்பாங்க. அந்த மாதிரிதாங்க டான்ஸர் உலகமும். அது எங்கேயும் கிடைக்காது. அப்படி பழகுவாங்க. பாய்ஸ், கேர்ள்ஸ் டான்ஸர் சேர்ந்து வெளி யூர் ஷூட்டிங்கு போறப்ப கேர்ள்ஸ் டான்ஸரை யாராவது கிண்டல் பண் ணினா பாய்ஸ் வந்து பாதுகாப் பாங்க. அண்ணன், தங்கை மாதிரிதான் அவ்வளவு பாசம் காட்டுவாங்க. டான் ஸர்ஸுக்குள் காதலும் உண்டு. அப்படி காதலிக்கிற 80 சதவீதம் பேர் நிச்சயம் திருமணம் பண்ணிப்பாங்க. காதலில் அவ்ளோ உறுதியா இருப்பாங்க.

ஷூட்டிங்ல ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ், அர்ஜூன் மாதிரியான ஹீரோக்கள் எல்லோரும் டான்ஸர்கிட்ட நல்லாப் பேசுவாங்க. குறிப்பா, விஜயகாந்த் சார், பிரபு சார் ரொம்ப ஃபிரெண்ட்லியா இருப்பாங்க. ஹீரோயின்ஸும் அப்படித்தான். ஒரு அக்கா மாதிரி கேர்ள்ஸ் அஸிஸ்டென்ட் கிட்ட பழகுவாங்க. சொந்த விஷயம் கூட பகிர்ந்துப்பாங்க. இயக்குநர், கேமராமேன், ஆர்ட் டைரக்டர்கூட டான்ஸர்ஸுக்கு அவ்வளவு மரியாதை கொடுப்பாங்க. இதெல்லாம் இப்போ அவ்வளவா பார்க்க முடியலை. மாறிடுச்சு. வாழ்க்கை அதுதானே. சின்ன சின்ன இடைவெளி எல்லாத்துலயுமே இருக்கு. அது டான்ஸ்லயும் வந்துடுச்சு. அப்போ, படத்தோட இயக்குநர், கேமரா மேன், ஆர்ட் டைரக்டர், அஸிஸ்டென்ட் டைரக்டர் இப்படி எல்லாருமே 99 சதவீதம் பாய்ஸாத்தான் இருப்பாங்க. இன்னைக்கு அது மாறிடுச்சு. ஆனா, அப்போ தொடங்கி இப்போ வரைக்கும் டான்ஸ்ல மட்டும்தான் 50 சதவீதம் கேர்ள்ஸ், 50 சதவீதம் பாய்ஸ். எனக்குத் தெரிஞ்சி இந்த சமபங்கு டான்ஸர்கிட்ட மட்டும்தான் இருக்கு. இந்த சமநிலை எல்லா வேலையிலும் இருந்தா நல்லா இருக்கும்.

‘‘நம்ம படங்கள்ல மட்டும் ஏன், ஹீரோ, ஹீரோயின் பின்னாடி குரூப்பா டான்ஸர் ஆடுறாங்க?’ன்னு 10 வருஷத்துக்கு முன்னால கேட்க ஆரம்பிச்சாங்க. ‘அதனால என்ன. டான்ஸ் ஆடுறதால ஒரு குடும்பம் நல்லா இருக்குமே’ன்னு எனக்கு தோணும். சினிமாவுல இருக்குற சண்டை, காமெடி மாதிரி டான்ஸர்களும் ஹேப்பியா இருந்துட்டு போகட்டுமே.

அப்பாகிட்ட டான்ஸரா இருந்தவங் களோட பசங்கள நான் பார்க்குறப்ப ‘அம்மா, அப்பா எப்படி இருக்காங்க’ன்னு கேட்பேன். ‘சின்ன வயசுல நான் எப்படி ஆடினேன்’ என்பதை பத்தி அவங்க சொன்னதை வந்து டான்ஸர் பசங்க என்கிட்ட சொல்வாங்க. எனக்கு சந்தோஷமா இருக்கும். என்னதான் இருந்தாலும் ’அந்த டான்ஸர்கள் பார்த்து வளர்ந்த பையன்தானே நான்’னு அந்த நேரத்துல தோணும்.

இப்பவும் படம் பாக்குறப்ப, பாட்டுல டான்ஸர் நிறையப் பேர் ஆடினா, எனக்கு ரொம்பவும் பிடிக்கும். நான் அதைத்தான் முதல்ல பார்ப்பேன். யார் நல்லா ஆடுறாங்க, யார் தப்பு செய் றாங்கன்னு பார்ப்பதும் உண்டு. ஏன்னா, அது என்னோட டான்ஸர் புத்தி. இப்படி டான்ஸை என்னோட லைஃப்ல ஒரு அங்கமா எடுத்துக்கிட்ட நான், ஸ்கூல் டேஸ்ல ஒரு கல்ச்சுரல் நிகழ்ச்சியில கூட கலந்துக்கிட்டது கிடையாது? அதுக்கும் காரணம் இருக்கே.

- இன்னும் சொல்வேன்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x