Published : 29 Jul 2021 16:22 pm

Updated : 29 Jul 2021 16:22 pm

 

Published : 29 Jul 2021 04:22 PM
Last Updated : 29 Jul 2021 04:22 PM

டீன் ஏஜில் தனுஷ் மாதிரி இருந்தேன்; எப்போதும் ஊக்கம் பெறுகிறேன்: ரத்னகுமார் பெருமிதம்

aadai-director-tweet-for-dhanush-birthday

சென்னை

எப்போதும் தனுஷிடமிருந்து ஊக்கம் பெறுகிறேன் என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், நேற்று (ஜூலை 28) தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டுப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும், அவருடைய ரசிகர்களும் இணையத்தில் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.


'ஆடை' படத்தின் இயக்குநர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பதிவில் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"என்னைச் சுற்றி இருப்பவர்கள் என்னுடைய டீன் ஏஜ் காலத்தில் பார்க்க தனுஷ் போல இருப்பதாகக் கூறினார்கள். அதுகுறித்து எப்போதும் என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்ததற்கு நன்றி. எப்போதும் அவரிடமிருந்து ஊக்கம் பெறுகிறேன். நாங்கள் சந்தித்தபோது கூட அவரிடம் இதைச் சொன்னேன். அதற்கு அவர் ஒரு புன்னகையையும், அத்துடன் 'இது கடவுளின் அருள்' என்றும் பதிலளித்தார்".

இவ்வாறு இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும், தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு அவரை வைத்துப் படம் தயாரிக்கவுள்ளவர்கள் பலரும் பிரத்யேக போஸ்டர்களை வெளியிட்டனர். இன்று (ஜூலை 29) தனது ட்விட்டர் பதிவில் தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவரும் நன்றி எனத் தெரிவித்துள்ளார் தனுஷ்.


தவறவிடாதீர்!

தனுஷ்ஆடை இயக்குநர்இயக்குநர் ரத்னகுமார்தனுஷ் பிறந்த நாள்தனுஷ் பிறந்த நாள் வாழ்த்துரத்னகுமார் ட்வீட்ஆடை இயக்குநர் ட்வீட்One minute newsDhanushAadai directorDirector rathnakumarDhanush birthdayDhanush birthday wishRathnakumar tweetAadai director tweert

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x