இயக்குநர் ப்ரியதர்ஷனுடன் பணியாற்றிய அனுபவம்: ரம்யா நம்பீசன் பகிர்வு

இயக்குநர் ப்ரியதர்ஷனுடன் பணியாற்றிய அனுபவம்: ரம்யா நம்பீசன் பகிர்வு
Updated on
1 min read

'நவரசா' ஆந்தாலஜி படத்தில் இயக்குநர் ப்ரியதர்ஷனுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகை ரம்யா நம்பீசன் பகிர்ந்துள்ளார்.

கரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கு உதவுவதற்காக 'நவரசா' ஆந்தாலஜி தயாராகி உள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. 'நவரசா' ஆந்தாலஜியில் 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.

இதில் நகைச்சுவையை மையப்படுத்தி உருவாகியுள்ள ஒரு படத்தை ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். 'சம்மர் ஆஃப் 92' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'நவரசா' ஆந்தாலஜியில் நடித்திருப்பது குறித்து நடிகை ரம்யா நம்பீசன் கூறியிருப்பதாவது:

''எனது கதாபாத்திரத்தில் சிறு வயது தோற்றத்திலும், முதிய வயது தோற்றத்திலும் நானே நடிக்க வேண்டும் என்று என்னிடம் கூறியபோது, எனக்குச் சற்று குழப்பமாக இருந்தது. முதிய வயது தோற்றத்தை, என்னால் சரியாகச் செய்ய முடியுமா எனத் தயங்கினேன். இயக்குநர் ப்ரியதர்ஷன் ஒவ்வொரு காட்சியையும் மிகப் பொறுமையாகச் சொல்லிக்கொடுத்து, படப்பிடிப்பில் நன்றாகப் பார்த்துக்கொண்டார். அவரால்தான் இப்படத்தில் நடிப்பது எளிமையானதாக இருந்தது. மிகப்பெரும் ஆளுமையான இயக்குநர் ப்ரியதர்ஷனுடன் பணியாற்றியது மறக்க முடியாத மிகச்சிறந்த அனுபவம்''.

இவ்வாறு ரம்யா நம்பீசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in