Published : 28 Jul 2021 11:02 AM
Last Updated : 28 Jul 2021 11:02 AM

தனுஷின் 'மாறன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படத்துக்கு 'மாறன்' எனத் தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. மாளவிகா மோகனன், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்துக்குத் தலைப்பை இறுதி செய்யாமல் படப்பிடிப்பில் முழுமையாக கவனம் செலுத்தி வந்தது படக்குழு. இன்று (ஜூலை 28) தனுஷ் தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

'மாறன்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதனை தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள். முழுக்க த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகிறது. தற்போது ஹைதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனை முடித்துவிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் தனுஷ் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x