Published : 27 Jul 2021 16:37 pm

Updated : 27 Jul 2021 16:37 pm

 

Published : 27 Jul 2021 04:37 PM
Last Updated : 27 Jul 2021 04:37 PM

ஆர்ஜே பாலாஜிக்கு நாயகியாகும் அபர்ணா பாலமுரளி

badhaai-ho-tamil-remake-actors-confirmed

சென்னை

'பதாய் ஹோ' தமிழ் ரீமேக்கில் ஆர்ஜே பாலாஜிக்கு நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளார்.

அமித் ரவீந்திரநாத் ஷர்மா இயக்கத்தில் வெளியான பாலிவுட் படம் ‘பதாய் ஹோ’. ஆயுஷ்மான் குரானா, நீனா குப்தா, கஜ்ராஜ் ராவ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 2018ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை போனி கபூர் கைப்பற்றினார்.


இதன் தமிழ் ரீமேக் பணி முடிவாகிவிட்டது. விரைவில் படப்பிடிப்புக்குச் செல்லவுள்ளனர். 'பதாய் ஹோ' தமிழ் ரீமேக்கை ஆர்ஜே பாலாஜி இயக்கி, நாயகனாக நடிக்கவுள்ளார். அவருடைய அப்பா கதாபாத்திரத்தில் சத்யராஜ், அம்மா கதாபாத்திரத்தில் ஊர்வசி ஆகியோரை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் எனத் தெரிகிறது.

மேலும், ஆர்ஜே பாலாஜிக்கு நாயகியாக அபர்ணா பாலமுரளி ஒப்பந்தமாகியுள்ளார். 'பதாய் ஹோ' தமிழ் ரீமேக்கிற்காக கே.பாக்யராஜிடம் 'வீட்ல விசேஷங்க' தலைப்புக்கான உரிமை குறித்துப் பேசியுள்ளார் ஆர்ஜே பாலாஜி. இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளதாகவும், 'வீட்ல விசேஷங்க' தலைப்பிலேயே 'பதாய் ஹோ' படத்தின் தமிழ் ரீமேக் தயாராகும் என்றும் கூறப்படுகிறது.


தவறவிடாதீர்!

RjbalajiAparna balamuraliBadhaai hoBadhaai ho tamil remakeSathyarajOne minute newsUrvashiஆர்.ஜே.பாலாஜிஅபர்ணா பாலமுரளிபதாய் ஹோபதாய் ஹோ தமிழ் ரீமேக்சத்யராஜ்ஊர்வசிபதாய் ஹோ ரீமேக்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x