Published : 26 Jul 2021 18:44 pm

Updated : 31 Jul 2021 15:08 pm

 

Published : 26 Jul 2021 06:44 PM
Last Updated : 31 Jul 2021 03:08 PM

'விக்ரம்' அப்டேட்: கமலுக்கு மகனாக காளிதாஸ் ஒப்பந்தம்

kalidass-jayaram-in-kamal-starring-vikram

சென்னை

'விக்ரம்' படத்தில் கமலுக்கு மகனாக நடிக்க காளிதாஸ் ஜெயராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஜூலை 16-ம் தேதி தொடங்கப்பட்டது. இதில் ஃபகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கமலுடன் நடிக்கவுள்ளனர். தற்போது கமல் - ஃபகத் பாசில் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.


'விக்ரம்' படத்துக்கு ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரனும், இசையமைப்பாளராக அனிருத்தும் பணிபுரிந்து வருகிறார்கள். இதனை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.

தற்போது 'விக்ரம்' படத்தில் கமலுக்கு மகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க காளிதாஸ் ஜெயராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கமல் மீது பெரிய மரியாதைக் கொண்டவர் நடிகர் ஜெயராம். பல்வேறு பேட்டிகளில் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

'ஒரு பக்க கதை' படத்தின் அறிமுக விழாவில், காளிதாஸ் ஜெயராமின் கையைப் பிடித்து மேடைக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தி வைத்தவர் கமல் என்பது நினைவு கூரத்தக்கது. தற்போது கமலுக்கு மகனாக நடிக்க காளிதாஸ் ஒப்பந்தமாகி இருக்கிறார்.


தவறவிடாதீர்!

VikramVikram updateKamalKalidassLokesh kanagarajJayaram sonJeyaramJeyaram sonOne minute newsவிக்ரம்விக்ரம் அப்டேட்கமல்காளிதாஸ் ஜெயராம்லோகேஷ் கனகராஜ்ஜெயராமின் மகன்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x