'உறியடி' விஜய்குமாரின் புதிய படம் தொடக்கம்

'உறியடி' விஜய்குமாரின் புதிய படம் தொடக்கம்
Updated on
1 min read

'உறியடி' விஜய்குமார் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

'உறியடி', 'உறியடி 2' ஆகிய படங்களை இயக்கி நடித்தவர் விஜய்குமார். மேலும், சூர்யா நடித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'சூரரைப் போற்று' படத்துக்கு வசனம் எழுதியிருந்தார். தற்போது புதிய படமொன்றில் நாயகனாக நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு இன்று (ஜூலை 16) சென்னையில் தொடங்கியது. அறிமுக இயக்குநர் அப்பாஸ் இயக்கி வருகிறார். இவர் 'உறியடி', 'உறியடி 2' ஆகிய இரண்டு படங்களிலும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்குமாருக்கு நாயகியாகப் புதுமுகம் அர்ஷா நடித்து வருகிறார். இவர்களுடன் சங்கர் தாஸ், அவினாஷ், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக பிரிட்டோ, எடிட்டராக கிருபாகரன், இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்து வருகிறார்கள்.

ஆக்‌ஷன், டிராமா பாணியில் இந்தப் படம் உருவாகிறது. சென்னையில் தொடங்கியுள்ள படப்பிடிப்பு மூன்று மாதங்களுக்கு நடைபெறவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in